நபார்டு வங்கி - கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஏனெனில்,  சேமித்து வைக்க வேண்டிய உபரி நீரில் 95 சதவீதத்தை பயன்படுத்தி விடுவதால், 386 பிளாக்குகளில் 139 பிளாக்குள் உள்ள நிலத்தடி நீர் சுரண்டப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு, வனப்பகுதிகளி அழிப்பு, நிலத்தடி நீர் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 7 கொங்கு மாவட்டங்களில் கடும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில், கொங்கு மண்டல வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக வர்த்தக வளாகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கொங்கு குளோபல் ஃபார்மின் உறுப்பினர்களான நிர்வாகி வனிதா மோகன், இயக்குநர்கள் கே. நல்லுசாமி, சுதாகர் பழனிசாமி, டி. நந்தகுமார் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் தேசிய வங்கியின் (நபார்டு) துணை நிர்வாக இயக்குநர் அமலோர்பவந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...