மைதானத்தில் மகளுடன் கொஞ்சி விளையாடிய தோனியின் வைரல் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தன் மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தன் மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்றிரவு புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரெய்னாவின் அபார ஆட்டத்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில், கேப்டன் தோனி போட்டி முடிந்த பிறகு, தனது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். சக வீரர்கள் சூழ்ந்திருக்க மண்டியிட்ட நிலையில் இருந்த தோனியின் தலையில் இருந்த தொப்பியை அவரது மகள் ஷிவா கழற்றி மாற்றியதும், வெற்றி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எங்கு போட்டி நடந்தாலும், தனது  மகளை கையில் தூக்கிக் கொண்டு செல்வது, வீட்டில் மகளுடன் தோனி விளையாடுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ஏற்கனவே வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...