வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொலை செய்த வழக்கில் அமைச்சர் உறவினரின் ஓட்டுநர் கைது

கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.


கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 36 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு அதில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பெண் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜெயந்தி என்ற பெண் காணமல் போனதும், தற்போது இறந்து கிடந்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போது, இராமநாதபுரம் ஜோதி நகரைச் சேர்ந்த மணிவேல் என்பவர் பிடிபட்டார். இவர் சுகாதார துறை அமைச்சரின், உறவினர் வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்ற நிலையில், வீட்டுத் தூய்மை பணிக்காக வந்த ஜெயந்தியை கொன்ற மணிவேல், அவரை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடைக்குள் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில், கொலைக்கான காரணம் கற்பழிப்பா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...