நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளின் மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.



வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜீ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசரக் கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேகக் கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.



இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...