மனதை ஈர்த்த மழலையர்களின் திரை நாடகம்: பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்த வேடங்கள்

கோவை: ஸ்தாயி திரையரங்கில் நடைபெற்ற திரை நாடகத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தியது பார்ப்போரின் எண்ணங்களைக் குதூகலப்படுத்தியது.

கோவை: ஸ்தாயி திரையரங்கில் நடைபெற்ற திரை நாடகத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தியது பார்ப்போரின் எண்ணங்களைக் குதூகலப்படுத்தியது.

கடந்த சில நாட்களாக, வருணபகவான் மழை பெய்வதற்கான வரத்தை கோவை மாவட்டத்திற்கு வழங்கி விட்டது போல, மாலை நேரத்தில் ஜோர் என மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் வெயிலின் தாக்கமும், இதன் காரணமாக இரவில் ஏற்படும் புழுக்கமுமின்றி மக்கள் நிம்மதி இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வரத்தின் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு காலவாதியாகிவிட்டது போலத் தெரிகிறது. மழை கோவையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போலும். இந்த நிலையில், 'தி பிளே ஆப் நோஸி பார்க்கர்' என்ற தலைப்பில் ஸ்தாயி திரையரங்கில் கோடை காலப் பயிற்சி நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஒரு நாடகம் அல்லது திரைப்படத்திற்கான காட்சிகளை எடுப்பதற்கு ஒருநாளிற்கு எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்பதை நாம் அறிந்ததே. கடைசி நிமிடக் குழப்பம், ஆடை அலங்காரப் பிரச்சனைகள், சரியான புரிதலின்மை மற்றும் எதிர்பார்த்த அளவில் குழந்தைகளின் வருகையின்மை உள்ளிட்ட பல்வேறு நிலவும். இந்த சூழலில், திரை நாடக பயிற்சிப்பட்டறையை இயக்குநர் லியேன் ஜேம்ஸ், ஏற்பாட்டாளர் சாரு மற்றும் ஜெய்ஸ்ரீ மூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



கடிகாரத்தில் முள் சாரியாக 06.30-ஐ தொட்டபோது, ஜெய்ஸ்ரீமூர்த்தி குழந்தைகளின் கண்கவர் நாடகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஸ்தாய் பயிற்சி பட்டறையில் சாருவிடம் இசையைக் கற்றுக் கொண்ட மாணவன் பிரதீப்பின் அழகிய இசையுடன் நாடகம் மெல்ல மெல்லத் தொடங்கியது. குழந்தைகள் மேடைக்கு வரும்போது, அவர்களது கதாபாத்திரத்தை பார்வையாளர்களால் எளிதில் புரிந்து கொள்ளும் வேடம் அணிந்திருந்தனர்.



அதோடு, வண்ணமயமிக்க விளக்குகள் மற்றும் விளக்குகளால் தயாரிக்கப்பட்ட சூரியன் போன்றவை நாடகத்திற்கு மேலும் மெருகூட்டியது. விஜய் டெண்டுல்கரின் ஆங்கில மொழிக் கலவையுடன் ராஜா, ராணி, நிதியமைச்சர், பிரதமர், மருத்துவர், ராணுவ வீரர் மற்றும் செருப்பு தைப்பவர் போன்ற கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகள் தத்ரூபமாக வேடமணிந்திருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, சுமார், 5 வயது சிறுமி சிறப்பாக நடித்து அசத்தினார்.



நாடகம் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்க, பின்புறத்தில் இருந்து காட்சிகளுக்கு ஏற்றாற் போல, ஒலியை எழுப்பி குழந்தைகளை நடிக்க வைத்தனர். மேலும், அவ்வப்போது, தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாடியும் குழந்தைகள் அசத்தினர். நகைச்சுவை, கலாச்சாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த கலவையாக இருந்த இந்த நாடகத்திற்குப் பார்வையாளர்கள் கைகளைத் தட்டியும், சிரிப்புக் கனைகளின் மூலமாகவும் பெரும் வரவேற்பு கொடுத்தனர். இந்த நாடகமானது அனைத்து வயதுடையவர்களையும்யும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...