சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிக்க முயற்சி : இருவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆண்டிப்பாளையம் பகுதியில் ஒட்டல் கடை நடத்தி வருபவர் சத்தியமூர்த்தி. இவர், தனது வீட்டிலிருந்து ஒட்டல் கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனால், அச்சமடைந்த சத்தியமூர்த்தி கூச்சலிட்டுள்ளார். 

இதைக் கேட்டு உடனடியாக திரண்ட பொதுமக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து மத்திய காவல்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு, சங்கர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த மத்திய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...