கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் : நீலகிரியில் உச்சகட்ட அலர்ட்..!

நீலகிரி : உயிர்க் கொல்லியான நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மாநில எல்லை மாவட்டமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி : உயிர்க் கொல்லியான நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மாநில எல்லை மாவட்டமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை செவிலியர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, இறப்புகளைத் தடுப்பதற்கும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக கேரள சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜிவ் சதாநந்தன் கூறியிருந்தார். இதனிடையே, தன்னலமற்ற சேவையை ஆற்றிய போது, நிபா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினியின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 



கேரளாவில் அச்சுறுத்தி வரும் இந்த நிபா வைரஸ், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு, முழு சோதனைக்குட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறது. 



நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக, கேரள எல்லையோர பகுதியான நாடுகானி, நம்பியார்குன்னு, சோலாடி, தாளூர், பாட்டவயல் மற்றும் கக்குன்டி ஆகிய சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் தலா 2 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நோய் அறிகுறி கண்டறிந்து, அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், இந்த நோய்க்கான அறிகுறியாகக் காணப்படும் தலைவலி, காய்ச்சல், இருமல், உடல்சோர்வு போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில எல்லையோரப் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...