பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் நடுக்கற்கள்: பெள்ளாதி கிராமத்தை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு கோரிக்கை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பதினான்காம் நூற்றாண்டு நடுக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளதால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பெள்ளாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பதினான்காம் நூற்றாண்டு நடுக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளதால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பெள்ளாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பண்டைய கொங்கு மண்டலத்தில் நாடு என்ற அரசியல் பூகோளப்பிரிவுகள் கி.பி 12-ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் தான் முதன் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டு பிரிவிற்கும் ஒரு தலைவன் நியமிக்கப்பட்டு அவர்கள் சாமந்து, நாட்டு சாமந்தன், நாட்டுக்கருமம், ஆராய்வார் போன்ற பெயர்களில் குறிக்கப்பட்டனர். கி.பி 14-நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டு பிரிவையும் நிர்வகிக்க நாட்டு சபைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளாள நாடு, பூலுவ நாடு ஆகிய இருவகை சமுதாய சபைகள் கொங்கு மண்டலத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளன. 

இக்காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாக பட்டிணமாக தற்போதைய பெள்ளாதி கிராமம் திகழ்ந்துள்ளது. இங்கு காணப்படும் நடுக்கற்கள் மற்றும் அதில் உள்ள பழந்தமிழ் எழுத்து குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ் பெண் ஒருவர் புலி போன்ற பெரிய காட்டு விலங்குடன் கைகளில் வாள் ஏந்தி போரிட்டு கொல்வது போன்றும், ஆண் ஒருவர் தன்னை நோக்கி பாயும் காட்டுப்பன்றியை வாளால் தாக்கி கொல்வது போன்றும் வீர நடுக்கற்கள் காணப்படுகின்றன.

இந்த புடைப்பு சிற்பங்களில் அடியில் பதினான்காம் நூற்றாண்டு பழந்தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டு, அதில் ஊரையும், விவசாயத்தையும் காக்க போரிட்டவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும், இப்பகுதி நாட்டுப்பிரிவு தலைவர்கள் சமூக ஒற்றுமையுடன் இருப்பதை சுட்டிக்காட்டும் நடுக்கல், பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஜீவ சமாதி, பெரும் மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட ஐந்து தலை நாகம் உள்ளிட்ட பல்வேறு பழமையான சிற்பங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. 

இங்கு திப்பு சுல்தானின் பீரங்கி படை தங்கியிருந்து போரிட்டதற்கான பீரங்கி திட்டு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு மேடை போன்றவையும் உள்ளன. முட்புதர்களுக்குள் மறைந்து கிடந்த சில பழமையான சின்னங்களை மட்டுமே தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் முதல் நிர்வாக பட்டிணமாக செயல்பட்ட பெள்ளாதி கிராமத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால், மேலும் பல வரலாற்று குறிப்புகள் மற்றும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் கண்டறியலாம் என்கின்றனர் பெள்ளாதி கிராம மக்கள்.



Video: Senthil

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...