ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சிசூடு: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது கலவரமாக மாறியது. போலீசார் மீதும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். உச்சகட்டமாக ஏராளமான வாகனங்களுக்கு தீயை வைத்தனர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

இதனால், போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானர்கள். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பையும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து அறிக்கை அளிக்கமாறு கூறியுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் டிஜிபி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...