தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; போலீஸ் வாகனங்களுக்கு தீ: சடலத்தை வாங்கவிடாமல் விரட்டும் அரசு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை வாங்க சென்ற உறவினர்களை, கூட்டம் கூட்டுவதாக கூறி போலீசார் தடியடி நடத்தினர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை வாங்க சென்ற உறவினர்களை, கூட்டம் கூட்டுவதாக கூறி போலீசார் தடியடி நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 ஆப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆணையை பிறப்பித்த அரசு இறந்தவர்களுக்காக அனுதாபமும் பட்டு இரங்கல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில், அம்மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வரும் 25-ம் தேதி வரை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

வன்முறையின் போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், யாரும் கூட்டம் கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். மேலும், உறவினர்களை அடித்து விரட்டினர். கண்ணீரோடு இருந்த பொதுமக்கள் அடிக்குப் பயந்து அலறியடித்து ஓடினர். ஒரு சிலர் சடலத்தை வாங்க மறுத்தனர் அவர்களை விரட்ட போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தீ

உச்சக்கட்ட அராஜகப் போக்குடன் செயல்படும் காவல் துறையினரைக் கண்டிக்கும் வகையில், போலீஸ் வானங்கள் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பரப்பு இன்னும் நீடிக்கிறது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடிக்கு போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...