'ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு': தூத்துக்குடி கலவரத்தில் போலீசாரின் அதிர்ச்சிகர வீடியோ

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடி நடத்திய போலீசார், உச்சகட்டமாக துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில், சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோல, தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், ’நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூறினர். மற்றொரு போலீசார், ’ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறினார். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...