தூத்துக்குடியில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம் : அதிரடிப் படையினர் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 3-வது நாளாக இன்றும் பதற்றமான உச்சநிலையை எட்டியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் தொடர்ந்து மாவட்டத்தின் பதற்றநிலை குறையாமல் உள்ளது. தூத்துக்குடியில் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், முத்தம்மாள் காலனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும், தெருக்களில் உள்ள டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அண்ணாநகர் பிரதான சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தடுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

எனவே, தூத்துக்குடி அண்ணா நகரில் பதற்றத்தை குறைக்கும் வகையில் திருச்சி சரக ஐ.ஜி., வரதராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட, ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அணிவகுப்பு நடத்தினர். வஜ்ரா வாகனமும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...