கல்வி உதவித் தொகையைப் பெற பள்ளிக்கூடங்களை இணையதளத்தில் இணைக்க அறிவுறுத்தல்

கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் பள்ளிக் கூடங்களை அதற்கான இணையதளத்தில் இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் பள்ளிக் கூடங்களை அதற்கான இணையதளத்தில் இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தேசிய உதவித் தொகை வழங்கப்படும். www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, 2018-2019-ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்விநிலையங்களும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீட்டை (User ID) பெற வேண்டும்.

மேலும், ஏ.ஐ.எஸ்.எச்.ஈ., எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் அதுபற்றி உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளைப் பொருத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...