தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு..?

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களிடமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையைக் கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பேசியதாவது :- தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் 19 பேர் படுகாயம், 83 பேர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையைக் கொண்டு வருவதே முக்கிய நோக்கமாகும். தூத்துக்குடி சம்பவத்தில் இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் 98 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களில் ரூ. 1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பிலான வாகனங்கள், பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் திறந்து வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும். புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே பேருந்துகள் இயங்கத் தொடங்கி விட்டன. நகரத்துக்கு உள்ளும் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசித்து வருகிறோம். தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை, அரசின் எண்ணமும் அதுவாகத்தான் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையானது நிறுத்தப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...