தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் : பெரும்பாலான கடைகள் அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சி சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் 75 ஆயிரம் ஆட்டோக்கள் உட்பட தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோக்களும் ஓடாது என தொழிற்சங்கங்கள்  கூறியுள்ளன.  மேலும், குமரியில் நாட்டுப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,000 படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

எதிர்கட்சியினர், பந்த் அறிவித்தாலும், மக்கள் பாதிக்காத வகையில், பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்கள் போக்குவரத்திலும் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் எவ்வித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...