தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம்: விவசாயிகள், வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.



கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் 2-வது நாளாக நீதிமன்றத்தையும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தையும் புறக்கணித்தனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து வந்து தங்களது கண்டத்தைப் பதிவு செய்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். 



இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "நீர்வளம், நிலவளம் காக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து போராடிய மக்களுக்குப் பரிசு மழையாக குண்டு மழை பொழிந்துள்ளனர். தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக என்றுமே கோவை மாவட்ட விவசாயிகள் இருப்பார்கள். தொடர்ந்து, தூத்துக்குடி மக்களுக்காகப் போராடுவோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டும்," என்றார்.

இதேபோல, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் காரணமாக நீதிமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...