கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதலில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பா.ஜ.க.,வின் எடியூரப்பா, பெரும்பான்மை பலம் இல்லாததால், பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

ஆட்சி அமைக்க 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 117 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால் எதிர்பார்த்தப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி எளிதில் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பின்போது பா.ஜ.க., வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பின்போது எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை.

தற்போது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உயரும். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. மூன்று தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் பலம் 107 ஆக மட்டுமே உயரும். எனவே, குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...