நெல்லை, குமரி மாவட்டங்களில் மீண்டும் இணையசேவை

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவக்கூடாது எனக் கருதிய தமிழக அரசு, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது. மேலும், இந்தத் தடையானது 5 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் இப்போது இணைய சேவை முடக்கமானது பெரும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

எனவே, இணையசேவை முடக்கத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள், வணிக நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இணையசேவை முடக்கத்திற்கான காரணம் என்ன..? என கேள்வியை எழுப்பியது. இதையடுத்து, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இணையசேவை நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை அனுப்பி உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...