தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை ஆரம்பம்

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையின் முக்கிய சுற்றுலாப்பகுதியான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.



இதேபோல, இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலா வந்தவர்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர். மழைக் காரணமாக அவர்கள் குடில்களின் கீழேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 42 மி.மீ., கூடலூர் பகுதியில் 41 மி.மீ, கின்னக்கொரை பகுதியில் 20 மி.மீ., மற்றும் உதகையில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 232 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...