சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

கோவை: சின்னசேலம் - புக்கிரவரி ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளை (மே26) முதல் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: சின்னசேலம் - புக்கிரவரி ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளை (மே26) முதல் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சின்னசேலம் - புக்கிரவரி ரயில் நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக சேலம் வழியாக வரும் ரயில்களின் நேரம் நாளை (மே26) முதல் இருதினங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதன் காரணமாக, ரயில் எண் (76848) சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயில் பாதிதூரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது சின்னசேலம் - விருதாச்சலம் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் (22154) சேலம் - சென்னை எக்மோர் ரயில் சுமார் 30 நிமிடங்கள் சின்னசேலம் ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

இதேபோல, திருவெரும்பூர் ரயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியால், சேலம் வழியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரும் ஒருசில ரயில்கள் பாதி வரையில் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண் (12084) கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படாது.

ரயில் எண் (12083) மயிலாடுதுறை - கோவை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை இயக்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...