பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு காலமானார்

வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.

வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். 

பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது மறைவுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...