சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டி மகளைக் காப்பாற்றிய தாய் : சிறுமி படுகாயம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் மகளை தாக்க வந்த சிறுத்தையை, பெண் ஒருவர் கட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் மகளை தாக்க வந்த சிறுத்தையை, பெண் ஒருவர் கட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. இவைகள், அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. மேலும், மனிதர்களையும் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியினரை உச்சக்கட்ட பீதியில் ஆழ்த்தியது. 



வால்பாறையை அடுத்த பெரியகல்லார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர் முத்துமாரி. இவருக்கு கணவர் இல்லை. தனது 11 வயது மகள் சத்தியாவை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை, சிறுமி சத்தியாவும் அவரது தாயும் சேர்ந்து தங்களது வீட்டின் பின்புறம் உள்ள விறகுகளை எடுத்து சமையல் அறையில் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி திடீரென பாய்ந்து சத்தியாவின் கழுத்தை கடித்து தூக்கி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துமாரி, சாதுர்த்தியமாக செயல்பட்டு, கையில் இருந்த விறகு கட்டையால் சிறுத்தைப்புலியை தாக்கி உள்ளார். இதனால், பயந்து போன சிறுத்தை வாயில் கவ்வியிருந்த சிறுமியை அங்கேய விட்டுவிட்டு தப்பியோடியது. 

படுகாயமடைந்த சிறுமி சத்தியாவிற்கு தேயிலை தோட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வால்பாறை நகரமன்ற துணைத்தலைவர் மயில்கணேசன் சத்தியாவின் தாயிற்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மேல்சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். சிறுமி மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...