கோவையில் பேன்சி கடையில் திடீர் விபத்து : பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். 

சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது. 

இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...