சமுதாய முன்னேற்றத்தில் தனிநபரின் பங்கு மிகவும் முக்கியம்: கடற்படை தளபதி லன்பா

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சமுதாய முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானது என நீலகிரியில் நடந்த பள்ளி விழாவில் பங்கேற்ற கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:- உங்கள் வாழ்வை பலர் உருவாக்கியதைப் போன்று, நீங்கள் பிறரிடம் அன்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழவில்லையெனில், அது வாழ்க்கையல்ல என அன்னை தெரசா கூறியதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.



மாணவர்கள் இன்று இருக்கும் சுற்றுச்சூழல் நிந்தரமானது என எண்ணிவிடக் கூடாது. வாழ்க்கை என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக முதியவர்களுக்கு உதவுவதோடு நீங்கள் பெற்ற கல்வியறிவையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஹென்றி லாரன்ஸ் இப்பள்ளியை துவக்கிய காலம் முதல் பாதுகாப்பு துறைக்கும், இப்பள்ளிக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இது மேலும் வளரும் என நம்புகிறேன். இப்பள்ளியில் படித்த பலர் வெண்ணிற ஆடை அணிந்து கடற்படையில் பணிபுரிவது எனக்கு பெருமையாக உள்ளது.



வரும் காலங்களில் உங்களில் பலர் பாதுகாப்பு படைக்கு சேருவீர்கள் என நான் நம்புகிறேன், என்றார்.

இறுதியாக, விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சுழற்கேடயங்களையும் அவர் வழங்கினார். பள்ளி தலைவர் தேசிராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...