உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 'தேயிலை சுற்றுலா விழா' தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட தேயிலைக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கியது.

தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் கர்நாடகா மாநில கலைக் குழுவினரின், தொள்ளு குனிதா நடனத்துடன் இரண்டு நாள் நடக்கும் தேயிலை சுற்றுலா விழா தொடங்கியது. இதனை தொழில் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தொடங்கி வைத்தார்.



1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவையொட்டி இடம் பெற்றுள்ள கண்காட்சியில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பலதரப்பட்ட தேயிலை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.



இருதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய் என பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாகக் கருதப்படும் தேயிலைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்படும் தேயிலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.



இதில், தேயிலை வாரியம், இன்கோ சர்வ் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகள் மற்றும் அதிக தேயிலை தூளை விற்பனை செய்த தொழிற்சாலைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்தத் தேயிலை சுற்றுலா விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...