தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்- ஜி.கே.வாசன்

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உரிய நேரத்தில் தற்போதைய அரசை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது கூறுகையில், "மக்களுக்கு தொடர்ந்து பாதகம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. ஆலை மூடப்படும் என்ற நம்பிக்கையை தூத்துக்குடி மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆலையை மூடுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தோல்வியை காட்டுகிறது. முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தவறை தமிழக அரசு கேட்காத பட்சத்தில் வருகின்ற காலத்தில் தற்போதைய அரசை தமிழக மக்கள் புறம் தள்ளுவார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...