பணப் பட்டுவாடா விவகாரம் மறுப்பு தெரிவித்த ஊடகங்கள்

நாடு முழுவதும் இந்துத்துவா தொடர்பான ஆதரவு செய்திகளை ஒளிபரப்புவதற்காக தேசிய ஊடகங்கள் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் கோப்ரா ஆப்ரேசனின் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் இந்துத்துவா தொடர்பான ஆதரவு செய்திகளை ஒளிபரப்புவதற்காக தேசிய ஊடகங்கள் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவம் கோப்ரா ஆப்ரேசனின் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் இந்துத்துவா மற்றும் அதன் கொள்கைகளை பரப்ப சில இந்து அமைப்புகள் திட்டமிட்டன. இதற்காக, ஊடகங்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேசிய அளவிலான சில ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் பணம் பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதனை பல்வேறு புலனாய்வுகளுக்குப் பிறகு கோப்ரா போஸ்ட் என்ற இலாப நோக்கமற்ற செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஆபரேஷன் 136" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த புலனாய்வில் வட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள், பணம் வாங்கிக் கொண்டு இந்துத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த புலனாய்வில் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், ஜு நியூஸ், நெட்வொர்க் 18, பே.டி.எம்., பாரத் சமாச்சர், சுவர்னா, பார்த்மன், தைனிக் ஜாக்ரன், ஸ்டார் இந்தியா, ஏபிபி நியூஸ், தைனிக் சாம்வாட், ரேடியோ ஒன், ரெட் எஃப்.எம்., லோக்மாட், ஏபிஎன் ஆந்த்ர ஜோதி, டிவி5, பிக் எஃப்.எம்., , கே நியூஸ், இந்தியா வாய்ஸ், தினமலர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், எம்.வி.டி.வி., இந்தியா டி.வி., இந்தி ஹபார், சேப் டி.வி., டி.என்.ஏ., அமர் உஜாலா, யூ.என்.ஐ., 9 எக்ஸ் டாஷன், சமச்சர் பிளஸ், எச்.எச்.என். லைவ் 24*7, பஞ்சாப் கேசரி, ஸ்வத்தந்திரா பாரத், ஸ்கூப்வூப், ரெட்டிஃப்.காம், இந்தியா வாட்ச், ஏஜே, சதனா பிரைம் நியூஸ் மற்றும் பல நாளிதழ்கள், வார இதழ்களும் இடம்பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த புலனாய்வு முடிவுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுப்பு

இந்த நிலையில்,  "ஆபரேஷன் 136" அறிக்கைக்கு சில ஊடகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். டைம்ஸ் நிறுவனம், இந்தியா டுடே, இந்துஸ்தான டைம்ஸ், இந்தியா டிவி மற்றும் இரு கன்னட செய்தி நிறுவனங்கள் இந்த புலனாய்வு உண்மையற்றது என்றும், தாங்கள் விலைபோகவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மறுப்பு விவரங்கள் பின்வருமாறு:-

டைம்ஸ்

புலனாய்வைப் பற்றி முன்னரே எங்களுக்குத் தெரியும். எங்கள் வழக்கறிஞர் கொடுத்த ஆலோசனையின் அடிப்படியில் புலனாய்வின் போக்கிலேயே நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால், எங்களது கொள்கைகள் மற்றும் கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே

நாங்கள் பத்திரிகை தர்மத்தை மீறுவது கிடையாது. நாங்கள் கூறிய கருத்துகள் பெரும்பாலானவை வெளியாகவில்லை. இதன் காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்புவது தொடர்பான வீடியோவை உடனடியாக நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

சுவர்ணா நிறுவனம் (கன்னடம்)

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு நபர் வந்து எங்களிடம் பேசினார். அப்போது, எங்களது செய்தியாளரை வைத்து அவரை விசாரித்தோம். செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சிறிது நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற அந்த நபர் மீண்டும் வரவில்லை. இது தொடர்பாக அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, அடுத்த நாள் செய்தியையும் பதிவு செய்துள்ளோம். எங்கள் கருத்துக்கள் திருத்து கூறப்பட்டுள்ளது. இந்த புலனாய்வில் உண்மைத் தன்மை இல்லை.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...