குளத்தை காணோம்...! : வடிவேலு பட பாணியில் திருப்பூரில் புகார்

திருப்பூர்: மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : மாவட்ட ஆட்சியரிடம் வடிவேலு பட பாணியில் குளத்தை காணோம் என்று பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

தாராபுரத்தை அடுத்த செட்டிக்களம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியின் 2017 - 2018 சமூக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது. 

அப்பகுதியில் குளங்கள் எதுவுமே இல்லாத நிலையில், இது போன்ற அறிக்கை வந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். அதன்படி, அந்த கிராமத்தில் எவ்வித குளமும் இல்லை என்றும் கடந்த 19-ம் தேதி அன்று சான்றிதழையும் பெற்றனர். 

குளம் அமைக்காமல், மோசடியில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவருக்கு உதவிய அலுவலர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'குளத்தை காணோம்' என்று வடிவேலு பட பாணியில் நஞ்சியம்பாளையம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...