தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை வேண்டும் : கல்கி சுப்ரமணியம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க காவல்நிலையங்களில் நீதிபதிகள் சோதனை நடத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க காவல்நிலையங்களில் நீதிபதிகள் சோதனை நடத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். 



கோவை வானவில் கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இக்கூட்டணியைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியம் பேசுகையில், "கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது வரை அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வைத்துதான் 13 பேர் எனத் தெரிய வருகிறது. எனவே, இது தொடர்பாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள் முன்னிலையில் உடனே விசாரணை நடத்தப்பட வேண்டும்.



காணாமல் போனவர்களை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட காவல்நிலையங்களில் நீதிபதிகள் உடனே சோதனை நடத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்," என்றார். 

மேலும், தூத்துக்குடியில் இருக்கும் பிற மாவட்ட போலீசாரை உடனே வெளியேற்ற வேண்டும் எனக் கூறிய அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக அதிகாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...