இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர்

டெல்லி: ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லி: ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி வரை இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தோனேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. சிங்கப்பூர் பயணத்தின்போது, ‘ஷாங்கிரி லா டயலாக்’ பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றுகிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்று தலைமை உரை ஆற்றுவது இதுவே முதல் முறை. 

இந்த மாநாட்டில் பேசும்போது பிரதமர் மோடி, இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு பற்றிய தனது நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் எடுத்துக் கூறுவார் என வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) பிரித்தி சரண் தெரிவித்தார். 

இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 70 ஆண்டு காலமாக ராஜ்யரீதியிலான உறவு உள்ளது. இந்தநிலையில், அங்கு செல்கிற பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேசுவார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி முன்னிலையில் இந்தோனேசியாவுடனும், சிங்கப்பூருடனும் இந்தியா பல ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...