சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : கேரள மாணவி உள்பட 4 பேர் முதலிடம்

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். 

சி.பி.எஸ்.இ., என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 16,38,428 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதில், அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியைச் சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர். 

தேர்வர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...