கோத்தகிரியில் தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடி : தலைதெறிக்க ஓடிய தொழிலாளர்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த கரடியைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 



இதனிடையே, கோத்தகிரி அரவேனு பெப்பேன் பகுதியில் கரடி குட்டியுடன் நடமாடி வருவதாக வெளியானத் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்தனர். இந்த நிலையில், தேயிலை தோட்டத்திற்குள் திடீரென குட்டியுடன் உலா வந்த கரடியைஙக கண்டு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஒட்டம் பிடித்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், கரடியைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டம் அருகே கூண்டு வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கும் வரை தேயிலை பறிக்கச் செல்வதில்லை என தோட்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...