பிளஸ்-2 படித்தவர்களும் இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேரலாம்

இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர பிளஸ்-2 படித்திருந்தாலே போதும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..!


இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர பிளஸ்-2 படித்திருந்தாலே போதும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..!

இளம் வயது முதல் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவற்றில் சேர்ந்து நாட்டிற்காகப் போராட வேண்டும் என பலரும் கனவு கண்டு இருப்பார்கள். இதற்காக அவர்கள் பள்ளி வயதில் இருந்தே உடல் அளவிலும், மனதளவிலும் ஆயத்தமாகியிருப்பார்கள். ஆனால், இந்தக் கனவுகளை பட்டப்படிப்பு படித்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பது பொதுவாக சாதாரண மனிதனிடம் பிரதிபலிக்கும் எண்ணமாகும். இந்த சூழலில், பட்டப்படிப்பை முடிக்காமல், பிளஸ்-2 படித்தவர்களும் இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் சேருவதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதை மறந்துவிடுகின்றனர். 



பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இந்திய பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் கப்பற்படையில் இணைந்து பணியாற்றுவதற்காக யு.பி.எஸ்.சி. (UPSC) சார்பில் ஆண்டுதோறும் 2 முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாட்டின் மிக முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ஒருமுறையும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் 2-வது முறையாகவும் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மே மாதம் என்பதால், முதல்கட்டத் தேர்வு முடிந்துவிட்டது. 2-வது கட்டத் தேர்வுக்கான விண்ணப்பம் வரும் ஜுன் 6-ம் தேதி முதல் ஜுலை 2-ம் தேதி வரை விநியோகிக்கப்பட இருக்கிறது. 

இந்தத் தேர்வை எழுத விரும்புவோர், இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் வழியில் பிளஸ்-2 தேர்வை முடித்திருக்க வேண்டும். மேலும், எஸ்.எஸ்.பி. (SSB) அடிப்படையிலான நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் தேர்வாகுபவர்களுக்கு புனேவில் 3 ஆண்டுகள் கூட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து, விமானப் படையில் சேர விரும்புபவர்களுக்கு ஐதரபாத் விமானப் படை தளத்திலும், கடற்படையில் சேர விரும்புபவர்களுக்கு கேரளாவிலும் ஓராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...