ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரையை வங்கி ஊழியர் சங்கம் ஏற்கவில்லை. இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த ஊழியர் சங்கத்தினர், பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியதாகக் கூறினர்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக 9 வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, இன்று (மே 30) மற்றும் நாளை அந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.



ஏறத்தாழ 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு ஊழியர்களில் பெரும்பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ரூ.300 கோடி உள்பட நாடு முழுவதும் சுமார் ரூ. 2,000 கோடி வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் தாக்கம், பணப் பரிவர்த்தனைகளிலும், ஏ.டி.எம்., சேவைகளிலும் எதிரொலிக்கக்கூடும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...