தொடர் மழையால் முதுமலை யானை சவாரி தற்காலிக ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது, கேரளாவில் ஒருதினத்திற்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரி தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

மேலும், தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை சவாரியை எதிர்பார்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



இது தொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், "பருவமழை துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழையின் போது யானை சவாரி ரத்து செய்ய வேண்டியுள்ளது. பருவமழை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலசூழலை பொறுத்து நடக்கும்," என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...