துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10,000 மும் நிதி உதவி வழங்கினார்.

தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அ.தி.மு.க.,வை தி.மு.க.,வும், தி.மு.க.,வை அ.தி.மு.க.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது, என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...