பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் ஆட்சியர்: மாவட்ட அளவில் கோவைக்கு 3-வது இடம்

கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிய பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று வெளியிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் முதல்முறையாக 11-ம் வகுப்பிற்கு நடைபெற்ற பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 35,085 மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதினர். இதில் 14,521 மாணவர்களும், 19,226 மாணவிகளும் என மொத்தம் 3,3747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 111 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 103 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.2 சதவீதமாகும். மேலும், தேர்வில் ஏதேனும் பாடப்பிரிவுகளில் தவறிய மாணவர்களும், கல்லூரியைப் போல தாங்கள் 12-ம் வகுப்பிற்கு செல்லுவதற்கு ஏதுவாக உடனடித் தனித்தேர்வின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 88.61% தேர்ச்சி.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளின் அடிப்படையில் பிளஸ் -1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.80 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. எஞ்சிய பள்ளிகளின் விபரம் பின்வருமாறு :-

1. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் - 98.80 சதவீதம் தேர்ச்சி

2. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி - 97.37 சதவீதம் தேர்ச்சி

3. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,ஆர்.எஸ்.புரம் (மேற்கு) - 97.24 சதவீதம் தேர்ச்சி

4. மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 96.74 சதவீதம் தேர்ச்சி

5. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரத்தினபுரி - 96.49 சதவீதம் தேர்ச்சி

6. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் - 92.52 சதவீதம் தேர்ச்சி

7. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் - 88.64 சதவீதம் தேர்ச்சி

8. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை - 88.46 சதவீதம் தேர்ச்சி

9. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி - 85.71 சதவீதம் தேர்ச்சி

10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு - 79.75 சதவீதம் தேர்ச்சி

11. மாநகராட்சி பா. கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி - 77.88 சதவீதம் தேர்ச்சி

12. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் - 77.88 சதவீதம் தேர்ச்சி

13. மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் - 71.67 சதவீதம் தேர்ச்சி

14. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையாம்பாளையம் - 71.64 சதவீதம் தேர்ச்சி

15. மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி - 71.07 சதவீதம் தேர்ச்சி

16. நகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் - 65.75 சதவீதம் தேர்ச்சி

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 639

தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை: 1,337

தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை: 1,976

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 477

தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை: 1,274

தேர்ச்சி பெற்ற மாண, மாணவியரின் எண்ணிக்கை: 1,753

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்: 74.64

மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்: 95.28

மொத்த தேர்ச்சி சதவீதம்: 88.61

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...