காட்டு யானைகள் ஊடுருவலைத் தவிர்க்க தேனீக்கள் வேலி அமைக்க முயற்சி

கோவை: கோவை வனக் கோட்டத்தில் ரூ. 1.28 கோடி செலவில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை வனக் கோட்டத்தில் ரூ. 1.28 கோடி செலவில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் அமைச்சர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பயிர்களை அழிக்கும் யானைகளை தடுக்க தேனீக்கள் மூலம் வேலி அமைக்கும் தொழில்நுட்பம், ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. செலவு குறைவான இத்திட்டத்தால், இயற்கை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.



இந்த நிதியாண்டில், கோவை வனக் கோட்டத்தில், ரூ. 1.28 கோடி செலவில், தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வனத்துறை களப்பணியாளர்கள், கடினமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென நிகழும் கடத்தல், ஆக்கிரமிப்பு, காட்டு தீ மற்றும் மனித - வன உயிரின மோதல் போன்ற நேரங்களில், அவற்றை எதிர்கொள்ள களப் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது அவசியம். இதற்காக, மாநிலத்தில் இரண்டு இடங்களில் உயர்நிலை படைகள் அமைக்கப்படும். இப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், உபகரணங்களுக்காகவும் ரூ. 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

வனத் துறைக்கு ரூ.5 கோடி ரூபாய் செலவில், மின்னணு கம்பியில்லாத தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்படும். கோவை அருகே ஆனைமலையில், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் ரீதியான, பல வண்ண மலர் தாவரங்களை கொண்ட, 'ஆர்க்கிட்' அரங்கம் அமைக்கப்படும். நாற்றங்கால் உற்பத்தி, பராமரிப்பு, அரங்கம் உருவாக்குதல் பணிக்காக, 46.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும். ஆனைமலையில் உள்ள, புல்வெளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய நில வரைபடம் தயாரிக்கப்படும், இவ்வாறு அவர் அறிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...