திருச்சி சாலையில் விட்டு விட்டு எரியும் தெருவிளக்குகள் : வாகன ஓட்டிகள் அவதி

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன. 

ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.

பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...