டுவிட்டரில் டிரெண்டாகிய 'நான்தான்பாரஜினிகாந்த்' ஹேஸ் டேக்

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து பேசிய நிலையில், தேசிய அளவில் இன்று 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி வருகிறது.

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்தித்து பேசிய நிலையில், தேசிய அளவில் இன்று 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி வருகிறது. 

அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, ``யார் நீங்க..?" என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ ``நான் ரஜினிகாந்த்" என்று சொல்கிறார். ``ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், ``நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும், ``சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா..?" என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் வலைதளத்தில், 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தேசிய அளவில் பிரபலமாகியுள்ள ஹேஸ் டேக்கில் இது 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வரும் ஜுன் 07-ம் தேதி வெளியாகவுள்ள காலா படத்தின் ப்ரோமோஷனைக் காட்டிலும், இந்த 'நான்தான்பாரஜினிகாந்த்' என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் வைரலாகி விட்டது போலும்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...