தூத்துக்குடி சம்பவம் : 7 பேரின் உடல்களை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின்  உடல்களை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர், ஒரு தடயவியல் நிபுணர் அல்லது எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர் பரிசோதனை நடத்த வேண்டும். குண்டு பாய்ந்த, வெளியேறிய பகுதிகளை போட்டோ எடுக்க வேண்டும். உடலை முழுமையாக அனைத்து கோணங்களிலும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்த உடல்களை உறவினர்கள் கேட்டால்மட்டும் கொடுக்கலாம், என உத்தரவில் கூறியுள்ளது.

இதனிடையே, தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்த கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் தடயங்கள் அழிக்கப்படும் என சங்கரசுப்பு என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர சுப்புவின் எதிர்ப்பை அடுத்து ஒரு வாரம் காலத்திற்கு ஆறு பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த தடை விதித்து தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...