நிலக்கரியில் இயங்கும் ஊட்டி மலை ரயில்: சோதனை ஓட்டம் தொடங்கியது

நீலகிரி: நிலக்கரியில் செயல்படும் பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின் கடந்த இரண்டு நாட்களாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.


நீலகிரி: நிலக்கரியில் செயல்படும் பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின் கடந்த இரண்டு நாட்களாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

உலக பாரம்பரிய யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு முதல் சேவையை செய்து வருகிறது.



மேட்டுப்பாளையத்திலிருந்து 46.61 கிலோ மீட்டர் தொலைவில் குன்னுார் வழியாக சுமார் 330 மீட்டர் கடல் மட்டதிலிருந்து உயரம் கொண்டுள்ள ஊட்டிக்கு இன்றும் சோர்வடையாமல் சென்றுகொண்டுள்ள மலை ரயில் சுமார் 208 வளைவுகளையும், 250 சிறு மற்றும் பெரிய பாலங்களையும் கடந்து செல்கிறது.

இடையே மலையிலிருந்து வரும் அருவிகள், வனத்தில் திரியும் வன விலங்குகள், மலை பிரதேசத்திற்கே உரித்தான தேயிலை தோட்டங்கள் இவைகளை ரசிக்க மலை ரயிலில் தான் செல்லவேண்டும். 

நுாற்றாண்டு கடந்து சென்று வரும் பயணிகளை இயற்கையில் வரும் நிலக்கரியை கொதிகலனில் கொதிக்க செய்து உந்து சக்தியால் இயக்கப்பட்ட மலை ரயில் இன்ஜின் காலபோக்கில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது டீசல் மற்றும் பர்ணஸ் ஆயில் கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. 

சென்ற வாரம் ஊட்டிக்கு வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சேர்ஸ்தா மலை ரயில் இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வியக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெறிவித்தார்.

இதில் முக்கியமானதாக ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் பொறுத்தப்பட்ட பயணிகள் ரயில் மீண்டும் இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி இன்ஜின் இயக்க சேதனை நடைபெற்றுவருகிறது. ரயில் என்ஜின் சோதனை இயக்கத்தை சேலம் கோட்ட ஏ.டி.எம்.தீட்சா சவுத்ரி ஆய்வு செய்தார்.



மேலும் அவர் கூறுகையில், "இந்த சோதனை ஓட்டத்தின் ஆய்வரிக்கையை ரயில்வே வாரியத்திற்கு அனுப்புவோம். மேற்கொண்டு அங்கிருந்து பெறப்படும் உத்தரவு அடிப்படையில் உலக பாரம்பரிய யுனிஸ்கோ சான்று பெற்ற நிலக்கரியில் இயங்கும் நீராவி இன்ஜின் பயன்பாட்டிற்கு வரும்" என்றார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...