உலக புகையிலை தினம்: புகையிலையை எதற்காக ஒதுக்க வேண்டும்?

கோவை: புகையிலையை குறித்து பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் நாள்தோறும் அதனை கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வடிவங்களில் உபயோகித்து வருகின்றனர்.

கோவை: புகையிலையை குறித்து பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் நாள்தோறும் அதனை கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வடிவங்களில் உபயோகித்து வருகின்றனர்.

புகையிலை இரண்டு வடிவங்களில் உபயோகிக்கப்படுவதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் துறையின் தலைவர் கீர்த்திவாசன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "புகைபிடித்தல் மற்றும் பான் மசாலா ஆகிய இரண்டு வகைகளில் புகையிலை உபயோகப்படுத்தப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் நுரையீரலை பாதிக்கும். அதிலுள்ள நிகோடின் ஒருவிதமான மயக்கத்தைத் தரும். இதனால், நாளடைவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். சிகரெட் மற்றும் பீடியில் தார் என்ற நச்சுப் பொருள் உள்ளது. அதுவே, கேன்சர் நோயை உருவாக்குகிறது. பான் மசாலக்களை சுவைப்பது நேரடியாக நுரையீரலை பாதிக்காது. ஆனாலும், அது கேன்சர் நோய் வர முக்கிய காரணமாக உள்ளது.



உலகில் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இது உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து ஒருவர் சுலபமாக வெளியேறிவிட முடியும். அதற்கு தன்னம்பிக்கை கொண்ட மனம் அவசியம்.

புகைபிடிப்பது நுரையீரலை மட்டுமல்லாது, உணவுக் குழாய், கணையம் மற்றும் குடலையும் பாதிக்கிறது. பான் மசாலா உட்கொள்வது வாய், உணவுக் குழாய், வயிறு பகுதிகளில் கேன்சர் நோயை உண்டாகும்." என்றார்.



இது தொடர்பாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் பான் மசாலா ஆகிய பழக்கங்களால் ஏற்படும் தீமையை அனைவருக்கும் உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் இந்த பழக்க வழக்கங்களால் பாதிப்படைகின்றன. புகைபிடிப்பவருக்கு அருகில் இருப்பவரும், குழந்தைகளும் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது." என்றார்.



பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் போது, அவர்களிடையே புகையிலை குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தெரியவரும். இந்திய சந்தியில் இந்த வியாபாரம் கடந்த நிதியாண்டில் மட்டும் 326.96 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வணிகத்தில் உலகின் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...