சிறுமுகை அருகே புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய ஆறு பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மொக்கைமேடு, காப்புக்காடு பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு வனத்துறையினர் ரோந்து சென்ற போது, நாட்டுத்துப்பாக்கியுடன் 6 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக நடமாடிக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி வளைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மொக்கைமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பன், அய்யாவு, முருகேஷ், நாகராஜ், குஞ்சான், ராசுக்குட்டி ஆகியோர் மீது வனச்சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 6 பேருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

வனக்குற்றங்களுக்கு இங்கு இதுவரை அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதியின் இந்தத் தீர்ப்பு வனக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கை என வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...