கோவை அரசு பொறியியல் கல்லூரியில் 50 அறைகள் கொண்ட கூடுதல் விடுதிகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை: ரூ. 37 கோடி செலவில் கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் அறைகள் இருக்கும் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: ரூ. 37 கோடி செலவில் கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் அறைகள் இருக்கும் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த ஏழு வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு/பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதற்கென ஆண்டிற்கு 152 கோடியே 20 லட்சம் ரூபாய் தொடரும் செலவினம் ஆகும்.

2011-12-ம் கல்வியாண்டு முதல் 2017-18-ம் கல்வியாண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,232 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-19-ம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் (68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படும். இப்பாடப் பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும். இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் பர்கூர், கோவை, காரைக்குடி, சேலம், திருநெல்வேலி மற்றும் வேலூரில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலுள்ள அரசு விடுதிகளில் தலா 150 மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவாக 3 நபர்கள் தங்கும் வசதியுள்ள 50 அறைகள் கொண்ட விடுதிகள் ரூ. 37 கோடி செலவில் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...