தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி: கோவையில் தமிழிசை பேட்டி

கோவை: ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி செய்ய இருப்பதாகக் கோவையில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடியில் 3 நாட்கள் மருத்துவ முகாம் அமைத்து களப்பணி செய்ய இருப்பதாகக் கோவையில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சின்னியம்பாளையம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் பா.ஜ.க., அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :- காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்து போட்டுள்ளார். இதன்மூலம், 120 ஆண்டுகள் தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை, தீர்ப்பதற்கான ஆரம்பக்கட்டம் தொடங்கியுள்ளது.

எஸ்.வி.,சேகர் விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெரிதாகக் கட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில்லை. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும், அடிபணிய வைக்க வேண்டும். காவல்துறையில் பயங்கரவாதம் என்ற பொன். ராதாகிருஷ்ணனின் கருத்தை எச்சரிக்கையாக தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் இருக்கிறது. தீவிரவாதிகள் இல்லையெனில், நிரூபியுங்கள்.

தூத்துக்குடியில் மிக மோசமாக நடந்திருக்கக்கூடியது. ஆயிரம் உயிரிழப்பை 13 பேர் உயிரிழப்பு தாங்கியுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துக்களே பிரதமரின் கருத்தாகும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழுவை அழைத்து சென்று 3 நாட்கள் தூத்துக்குடியில் முகாம் அமைத்து களப்பணி செய்ய இருக்கிறோம், இவ்வாறு கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...