விவசாயத் தோட்டங்களில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் நுழையும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பாறைப்பள்ளம், மேடூர் வெள்ளியங்காடு, பனப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. மேலும், பாறைப்பள்ளம் கிராமத்தில் விவசாயி ஒருவரையும் சிறுத்தை விரட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. இச்சம்பவங்கள் அனைத்தும் வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களிலேயே நடந்துள்ளது.

இது குறித்து பல்வேறு முறை புகார் அளிக்கப்பட்டதின் பேரில் வனத்துறை சார்பில் ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் பலன் ஏற்படாத நிலையில், மேட்டுப்பாளையம் நகரை அடுத்துள்ள மோத்தேபாளையம் கிராமத்தினுள் இன்று அதிகாலை நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வாழை தோட்டத்தினுள் புகுந்தது. அங்கு, காவலுக்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை, சிறுத்தை அடித்துக்கொன்றது. பின்னர், இது தொடர்பாக, விவசாயிகள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நாய் கொல்லப்பட்ட விதத்தை ஆய்வு நடத்தி நடமாட்டத்தை உறுதி செய்தனர். தங்களது தோட்டத்தில் கன்றுக்குட்டி, நாய் என அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டதால், உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "விரைவில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்படும்" என உறுதியளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...