சுற்றுலா பஸ் கவிழ்ந்த பகுதியில் மீண்டும் விபத்து அபாயம்!: பாதுகாப்பு இல்லாததால் அச்சம்

நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளை மலை அருகே, கொண்டை ஊசி பகுதியில், கடந்த மாதம் 26-ம் தேதி, தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில், இதுவரையில் எந்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.



இதுகுறித்து உதகையைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ''விபத்து நடந்த பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முழுவதும் பழுதடைந்து, பாதுகாப்பு இன்றி உள்ளது. இதனால், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.



இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "பைக்காரா- கூடலூர் சாலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே பகுதிகளில் தடுப்புசுவர் மற்றும் சாலையோர தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தவளை மலை அருகே, விபத்து நடத்த குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு பணிகள் நடந்துள்ளன. அப்பகுதியில் விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்." என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...