அழிவின் பாதையில் பழங்குடியின கிராமங்கள்..! எங்கே போகிறது மத்திய, மாநில அரசுகளின் நிதி..?

நீலகிரி: நீலகிரியில் வாழும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியபோதும், மழைக்கு ஒதுங்கக் கூட வீடு இல்லாத நிலை இன்றும் பல கிராமங்களில் தொடர்கிறது.


நீலகிரி: நீலகிரியில் வாழும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியபோதும், மழைக்கு ஒதுங்கக் கூட வீடு இல்லாத நிலை இன்றும் பல கிராமங்களில் தொடர்கிறது.



நீலகிரி மாவட்டத்தில் குறும்பா, தோடர், காட்டுநாயக்கர், இருளர், பனியர், கோத்தர் சமுதாய பழங்குடியின மக்கள் பண்டைய பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பழங்குடியினர் நலத்துறை மூலம் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டம் மற்றும் ஆண்டுதோறும் உள்ளாட்சி துறை மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.



கோடிகள் ஒதுக்கீடு:

அதனடிப்படையில், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் ரூ. 8.40 கோடியும், 2015-16-ம் நிதியாண்டில் ரூ. 9 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ. 7.30 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 17.54 கோடி என மொத்தம் ரூ. 42.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, மாவோயிஸ்ட் சிறப்பு நிதியின் கீழ், பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி எங்கே செல்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கூடலுார், பந்தலுார் பகுதியில் வாழும் பனியர், காட்டுநாயக்கர் சமுதாய மக்கள், பழங்காலத்தைப் போன்றே குடிசை வீடுகளில் வாழ்வதும், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதும் தொடர்கிறது.



இந்நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர். இங்கிருந்த குடிசைகள் மழையால் பாதிக்கப்பட்டதால், கிராமத்து மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியிடங்களுக்கு சென்றனர். பின்னர், அதிகாரிகள் ஆய்வு செய்து வனத்தில் குடியேறிய இவர்களில், ஏழு குடும்பங்களை மீண்டும் குடியமர ஏற்பாடு செய்தனர்.



இங்கு, சேரங்கோடு ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட சோலார் தெருவிளக்கும் சில நாட்களில் செயல் இழந்துகிடந்தது. இதனால், இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மாலை, 6.00 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொண்டு, அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் மக்கள் இரவு பொழுதை போக்கி வருகின்றனர். இதனால், இந்தக் கிராமம் விரைவில் அழிந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.



தங்களின் வாழ்க்கை நிலை குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "பல முறை உள்ளூர் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் மனம் வைத்து, எங்கள் கிராமத்தைக் காப்பாற்ற வேண்டும்," என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...