திருப்பூரில் ஆயுதப்படை காவலரின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுப்பு: தற்கொலையா என போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே மாநகர ஆயுதப்படை காவலரின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வருபவர் மோகன். இவர், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர். இவருக்கு ரமா என்ற மனைவியும், ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து மோகன் அலுவலகத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ரயில்வே போலீசாருக்கு காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது மோகன் என்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிச்சுமையின் காரணமாகவோ அல்லது சொந்த பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...